( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை நகர லயன்ஸ் கழகம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் இணைந்து சர்வதேச வெண் பிரம்பு தின நிகழ்வை நேற்று (15) வியாழக்கிழமை கல்முனையில் சிறப்பாக நடாத்தியது
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையுடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்வு, பார்வைக் குறைபாடுடையவர்களின் உரிமைகள், கண்ணியம் மற்றும் சம வாய்ப்புகள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என லயன் பிரதானி பொறியியலாளர் எம். சுதர்சன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுமார் 50 பார்வையற்ற மாணவர்கள், வைத்திய நிபுணர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், சமூக சேவை பிரதிநிதிகள், லயன்ஸ், லியோ உறுப்பினர்கள் என சுமார் 150 பேரும், விழிப்புணர்வு நடைபயணத்தில் சுமார் 300 பேரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி காலை விழிப்புணர்வு நடைபயணத்துடன் ஆரம்பமாகியது . கல்முனை CTB சந்தியில் இருந்து ஆதார வைத்தியசாலை சந்தி வரை சுமார் 400 மீட்டர் தூரம் இந்த நடைபயணம் இடம்பெற்றது.
நடைப்பயணத்தை தொடர்ந்து வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நினைவு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் பார்வையற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன.
நிகழ்வின் இறுதியில் பார்வையற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினரால் பரிசுகள் வழங்கப்பட்டன
பிரதம விருந்தினராக
லயன் ஜி.. ஷாஹிர் அஹமட் கலந்து சிறப்பித்தார்
,கௌரவ அதிதிகளாக ரி.ஜே.. அதிசயராஜ் பிரதேச செயலாளர், கல்முனை வடக்கு , பொது விடயங்களுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரி வாஹிட், , முன்னாள் கிழக்கு மாகாண செயலாளர் மூ.கோபாலரெட்ணம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் .













