" எமது நாட்டிற்கு முதியோர் இல்லங்கள் தேவையில்லை, தேவைப்படுகிறது " எனும் தலைப்பில் மிகவும் விறுவிறுப்புடன் நடைபெற்ற விவாத போட்டியில் வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடு பூசலார் அறநெறிப்பாடசாலை முதலாம் இடத்தினையும், கருங்காலிச்சோலை - பாசிக்குடா ஸ்ரீ கிருஷ்ணா அறநெறிப்பாடசாலை இரண்டாம் இடத்தினையும், மூன்றாம் இடத்தினை கண்ணகிபுரம் முத்தமிழருவி அறநெறிப்பாடசாலையும் பெற்றுக்கொண்டதுடன் மருதநகர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அறநெறிப்பாடசாலை விசேட பாராட்டினையும் பெற்றுக்கொண்டன.
போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டியோருக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் அதிதிகளாலும் நடுவர்களாலும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மேலும் இப்போட்டியில் நடுவர்களாக கடமையாற்றிய வாழைச்சேனை இந்து கனிஷ்ர வித்தியாலய அதிபர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் அவர்களும், சைவ வித்தகரும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வளவாளருமான திரு.வெ.சசிதரன் அவர்களும் ஏற்பாட்டு குழுவினரால் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.தனலெட்சுமி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள், மற்றும் புதுக்குடியிருப்பு சேகிழார், பேத்தாழை ஸ்ரீ முருகன், கல்குடா நாமகள், விநாயகபுரம் ஸ்ரீ பேச்சியம்மன் ஆகிய அறநெறிப்பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை பார்த்து ரசித்தனர்.

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)





