கூத்துக் கலை காவலர் மட்டக்களப்பு ஆரையூர் அருளின் கூத்திலக்கியம் பற்றிய பார்வை .

ம. கேதீஸ்வரன்


ஈழத்திருநாட்டின் கிழக்குத் தமிழகத்தில் தொன்மையும் பழமையும் பண்பாடும் மங்காது மரபுடமைகாக்கின்ற மட்டக்களப்பு மண்ணின் மைந்தன்; ஆரையம்பதி தந்த அருளாளன்; ஆரையூர் அருள் என்று சிறப்பித்து அழைக் கப்படும்         மூ. அருளம்பலம், அன்னைத்தமிழ் மீது கொண்ட அடங்காத தாகத்தால் அவர் தந்த படைப்புக்கள் அத் தனையும் அற்புதமே. அதிபராக, ஆசிரியராக, கலைஞ னாக, கவிஞனாக பக்தி பாவலராக, அண்ணாவியாராக என்று பல தளங்களில் நின்று தமிழ்காக்கும் காவலனாக மிளிர்கின்றார், எனில் அது மிகையாகது. 

  'தில்லைக்கூத்தனே' என்று மாணிக்கவாசகப்பெருமான் சிவபுராணத்தில் இறைவனைச் சிறப்பித்து பாடுகின்றார். 'கூத்து' எனும் சொல் புராண, இதிகாச, சங்க இலக்கியங்களில் ஆடற்கலைக்கு கொடுக்கப்பட்ட பழந் தமிழ்ப்பெயராகும். இறைவன் உலக உயிர்களை உய்விக்கும் பொருட்டு எழு வகைக் கூத்துக்களை ஆடியதால் 'கூத்தன்' என அழைக்கப்படு கின்றார். இவ்வாறு தொன்மையும் பழமையும், கொண்டு  விளங்கும் கூத்துக்கலையின் காவலனாக நின்று மிளிர்கின்றார் அருளம்பலம். 

இவர் கூத்துக்களை ஆடியும் அவற்றை பழக்கியும் வந்துள்ள அதேவேளை, கூத்துக்கள் எழுதியும் தன்பணி| செய்து வருகின்றார். இவர் எழுதிய கூத்துக்களை கதை நிகழும் காலத்தை அடிப் படையாகக் கொண்டு புராண காலம், இதிகாச காலம், காப்பிய காலம், நவீன காலம் எனப் பிரித்து நோக்கலாம். அந்தந்த காலத்திற்கு பிசகாத வகையில் கூத்துக்களின் கதையோட்டத்தைக் கச்சிதமாக கையாண்டுள்ளார். அதன டிப்படையில், புராண காலக்கதைகள்: இறைவனும் புலவனும், இராவண சொரூபம், இரணிய சங்காரம், சூரசங்காரம், சாத்தியவான் சாவித்திரி, மானீன்ற வள்ளி, மறலியை வென்ற மங்கை, காத்தவராயன், அரிசந்திர காண்டம், அரிச்சந்திர மயான காண்டம்.  

இதிகாசகாலக்கதைகள்: இடும்பன் வதம்,குருதட்சணை, மாதுசா பட்டாபிசேகம், லவகுசா காப்பிய காலக்கதைகள், கண்ணகி சபதம் நவீன காலக் கதைகள், பணச்செருக்கு, மங்கள தீபம், மட்டக்க ளப்பு மகிமை, மனிதம் மாறியதால், கல்யாணப்பரிசு, ஞானம் பிறந்தது, குருபக்தி, நாகரிகமோகம், உயர்ந்தவர் களும் தாழ்ந்தவர்களும் முத லானவற்றைக் கூறலாம். ஆரையூர் அருள் தனது கலை| யுலகப் பயணத்தில் மொத்தம் 26 கூத்துக்களை எழுதி யுள்ளார். இது ஈழத்து கூத்துக் கலைக்கு கிடைக்கப்பெற்ற பெருங்கொடையாகும். இவர் எழுதிய கூத்துக்களில்    11 வட மோடிக்கூத்துக்களும்   09 தென் மோடிக்கூத்துக்களும்    03 சிந்து நடைக்கூத்துக்களும், மூன்று இசை நாடகமும் அடங்கு கின்றன. இவற்றுள் வடமோடி, தென்மோடி, சிந்துநடை கூத்துக்களுள் பணச்செருக்கு, மங்க ளதீபன், மனிதம் மாறியதால், பிறந்தது, நாகரீக மோகம், களும் போன்ற கூத்துக்கள் கல்யாணப்பரிசு, ஞானம்) உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்) சமூகப்பிரச்சினை, சமூக எழுச்சியை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளது.

கூத்துக்கலையின்பால் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அருள், 'இறைவனும் புலவனும்', 'இராவண சொரூபம்' எனும் இரு தென்மோடிக் கூத்துக்கள் அடங்கிய நூலைத் 'தமிழ் கூத்தியல்' எனும் நாமத்தோடு 2020-ஆண்டு வெளியிட்ட மையும் குறிப் பிடத்தக்கதாகும். 1962-ஆம் ஆண்டு பேராசி ரியர் சு. வித்தியானந்தன் 'அலங்காரரூபன்' எனும் தென்மோ டிக்கூத்தை தொகுப்பித்து நூலுருவாக்கினார். 1969-ஆம் ஆண்டு பண்டிதர் வி.சீ. கந்தையா 'அனுருத்திரன்' தென்மோடிக்கூத்தும் 'இராமநாடகம்' வடமோடிக்கூத்தும் தொகுப்பித்து நூலுருவாக்கினார். ஆனால், ஆரையூர் அருள் தனது  புலமையால் எழுதி வெளியிட்ட கூத்திலக்கியம் என்ப தோடு, இதுவே கிழக்கிலங்கை யின் முதலாவது தென்மோடிக்கூத்து நூல் எனவும் கருதலாம்.

1997-ஆம் ஆண்டு வெளியாகிய தினக்குரல் பத்திரிகையில் சண். தவராசா புலவரை இவ்வாறு விழிக்கின்றார்.'நாட்டுக் கூத்து அருகி விடாமல் காக்கும் அருளம்பலம், தன் இரத் தத்தில் ஊறிய இக்கலையை நவீனப்படுத்தி நவீன நாட்டுக் கூத்தாக மாற்றி, நாடக மேடைகளில் அவற்றை மேடை யேற்றி, அதனை ஜனரஞ்சகப்படுத்தி வரும் வல்லோன். மகிழ டித்தீவு சரஸ்வதி வித்தியாலயத்தில் அதிபராக இவர் கடமை யாற்றியபோது, இவருடைய 'சுந்தரி விடுதூது' எனும் நாட்டுக் கூத்து தமிழ்த்தினப் போட்டியில் முதலிடத்தினைப் பெற்ற மையும் குறிப்பிடத்தக்கது' எனப் பதிவு செய்கின்றார்.

1994-ஆம் ஆண்டு வெளியாகிய தினக்குரல் பத்திரிகை, ஆரையூர் அமரனின் வித்தாரத்தை இவ்வாறு குறிப்பிடு கின்றது. 'நாட்டுக்கூத்து வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்த அருளம்பலம் எனவும், ஆரையம்பதியில் வாழையடி வாழையாக கலைத்தொண்டு புரிந்துவரும் ஒரு கலைஞர் எனவும் 1974- ஆம் ஆண்டு பொலநறுவை முத்துக்கல் தமிழ் வித்தியாலய மாணவர்களைக் கொண்டு 'வள்ளி திருமணம்' எனும் வடமோ டிக்கூத்தை ஆடி அரங்கேற்றம் செய்து பொதுமக்களின் பெரும் பாராட்டினைப் பெற்றவர்'  எனவும் குறிப்பிடுகின்றது.

1992-ஆம் ஆண்டு 'வழிதவறிய வஞ்சி' எனும் வடமோடி நவீன நாட்டுக்கூத்தை தயாரித்து நெறி யாள்கை செய்ததுடன் வஞ்சியின் தாயாக பாத்திரமேற்று ஆடி அரங்கேற்றியதும் குறிப்பிடத்தக்க தாகும். இக்கூத்தானது மட்டக்க ளப்பில் பல பகுதிகளில் ஆடப் பெற்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1993-இல் 'அனுமன் கண்ட சீதை' என்ற இதிகாச வடமோடிக் நாட்டுக் கூத்தை தயாரித்து நெறியாள்கை செய்து, சீதையாக பாத்திரமேற்று நடித்து அரங்கேற்றம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. 1994-ஆம் ஆண்டு 'மங்களதீபம்' என்ற வடமோடி என்ற நவீன நாட்டுக்கூத்தை எழுதி நெறியாள்கை செய்து தருமசொருபி எனும் தந்தையின் பாத்திரமேற்று ஆடி அரங்கேற்றம் செய்து, தனக்கே ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தியுள்ளார்.

1997-ஆம் ஆண்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகத் தினால் முதன்முதலாக பிரதேச சாகித்தியவிழா நடத்தப்பட்ட போது நாட்டுக் கூத்துப் போட்டியும் சேர்க்கப்பட்டது. அப் போட்டியில் ஆரையம்பதியில் பண்டுதொட்டு நாட்டுக்கூத்து ஆடப்பட்டு வந்தபோதிலும் அப்போட்டியில் பங்குபற்ற எந்த கலைஞர்களோ குழுக்களோ விண்ணப்பிக்காத துர்ப்பாக்கிய நிலை இருந்தது. மண்ணின் பெருமை காக்க 'மறிலியை வென்ற மங்கை' எனும் தென் மோடிக் கூத்தை எழுதி ஆரையம்பதி கலை ஞர்களைக் கொண்டு அதனை நெறியாள்கை செய்து 'சாவித்திரி' எனும் பெண் பாத்திரத்தை தாமே ஏற்று நடித்து, நடுவர்கள், பார்வையாளர்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். சாகித்திய விழாவிலே மீண்டும் அக்கூத்து ஆடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது.

ஆரையூர் அருள் கூத்துப்பனுவலோடு மட்டும் நின்றுவிடாது கூத்துச் சார்ந்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதிலும் பின் நிற்வில்லை. அந்தவகையில் 'மட்டக்களப்பில் வடமோடி, தென்மோடி கூத்துப்பிரதிகள்' என்னும் கட்டுரையில், கூத்துக் கையெழுத்துப் பற்றிய தெளிவான விளக்கம், கூத்து கையெ ழுத்துப்பிரதிகளைக் கையாளும் விதம், வாய்மொழி எழுத்துரு மரபின் தாளக்கட்டுக்கள் முதலானவற்றை விளக்குகிறார். அத்துடன் இக்கட்டுரையில், இரு வகையான கூத்துப்பாணி களும் கூத்துப்பிரதிகளும், அச்சுவாகனத்தின் செல்வாக்கும்) கூத்துப்பிரதிகளும், சமூகச்சூழலின் போக்கும் கூத்துப்பிரதி களும், கூத்துப்பிரதிகளும் கையோட்ட சீராக்கமும் போன்ற தலைப்பின் கீழ் மட்டக்களப்பு கூத்து குறித்து விரிவாக ஆய்வு செய்கின்றது. இவ்வாய்வுக்கட்டுரையில் மட்டக்களப்பு தமிழகத்தில் 132 வடமோடிக் கூத்துக்களும் 50 தென்மோடிக் கூத்துக்களும் இருந்தமையையும் எடுத்துக்காட்டுகின்றார். 

 2018-ஆம் ஆண்டு வெளிவந்த தேறல் சஞ்சிகையில் தென் மோடிக்கூத்தில் சிருங்கார இரசனை எனும் கட்டுரையில், தலைவன் தலைவிக்கிடையிலான, தலைவி தோழிக்கிடை யிலான தர்க்க தருவில் சிருங்காரசுவை மேலோங்கியுள் ளமையை இவ்வாறு விபரிக்கினறார்.

 தரு ‘நன்ன நன்னநான நன்ன நானா - நன்ன நான நன்ன நான நன்ன நானா பாங்கியரே நானுரைக்கச் கேளும் இரவு தூங்கு மஞ்சும் மீதிலுறங்கும் போது வாங்குசிலை மதனைப்போலொருவன் - எந்தன் வீங்குதனம் பிடித்திடக்கண்டேன் முக்தோடே முகத்தை வைத்துக் கொஞ்சி- முலை அகத்தோடே நகத்தை வைத்துக் கெஞ்சி - வெகு அகத்தோடேஅனைந்தாரடி வஞ்சி...'

 மண்முனைப் பற்று பிரதேசத்தில் ஆரையம்பதியில் கூத் துக்கலை' எனும் ஆய்வுக்கட்டுரையில் ஆரையம்பதிக் கிரா மத்தின் நாட்டுக்கூத்துக்கலைகளையும் அங்கிருந்த அண் ணாவிமார்களையும் மத்தாளக் கலைஞர்களையும் எடுத்து ரைக்கின்றார். 'முத்திரைப்பல்லவி' எனும் கட்டுரையில் அனு ருத்திரன், இந்திரன், பூங்காவனம், சாம்பேந்திரன், அலாங்க ரூபன், வாளவீமன் போன்ற கூத்துக்களின் முத்திரைப்பல்ல வியின் தாக்கம் பற்றி விபரிக்கின்றார்.

 2014-ஆம் ஆண்டு   த. நல்ல லிங்கம் நாட்டுக்கூத்து கலைஞர் பற்றி இவ்வாறு பதிவு செய் கின்றார். '05.10.1938 ஆண்டு மட்டுநகரின் வடபாலுள்ள வாகரையில் பிறந்து சென் செபஸ்தியார் பாடசாலையில் கற்று எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தி பெற்று ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டார். தான் கல்வி கற்கும் ஏழாவது வய திலிருந்தே கலையுலகில் கால் வைத்தார். செல்லத்தம்பி அண்ணாவியார், வந்தாறுமூலை செல்லையா அண்ணாவி மார்களின் 'கற்பலங்காரி', 'வாளவீமன்' கூத்துக்களில் முறையே சிவதருமன், வாளவீமன் பாத்திரமேற்று கூத்தாடி யவர். இவரின் பாத்திரப்பொருத்தம் ஆடல்,பாடல் என்பன அனைவராலும் பாராட்டப்பட்டன.1965-இல் கர்ணன் போரில், கர்ணனாக பாத்திரமேற்று நடித்த இவர், 1970-களில் மார்கண் டேயர் எனும் கூத்தைப் பழக்கி, அதில் பரிகாரி பாத்திரமேற்று நடித்தார். இக்கூத்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பிரிவில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டதும் நினைவு கூறத்தக்கது .

கலையுலகின் பல்துறைப்பட்ட நாயகனான ஆரையூர் அருள் கலைகாத்த கலைஞர்களை மதித்து அவர்களுக்கு மகுடம் சூட்டுவதிலும் பின்னிற்காதவர். தற்போது இவர் தனது வய துக்குச் சவால்விடும் வகையில், துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்து கூத்துக்களைப் பார்வையிட்டு வருகிறார். அதேசமயம் தான் எழுதிய கூத்துக்களைப் பழகியும் கூத்தைச் செம்மையாக்கம் செய்தும் மரபு மாறாத வகையில் கூத்து நிகழ்த்தப்படவேண்டும் எனும் முனைப்போடும் செயற் பட்டு வருகின்றார். இயங்கியல்வாதியாகவும் கூத்துக்கலை காக்கும் காவலராகவும் விளங்கும் இவர் மட்டக்களப்பின் தனித்துவம் வாய்ந்த கூத்துக் கலைஞராகவும் சிறப்பிக்கப்ப டுகிறார்.