சொந்தமாக இருக்க ஓர் இடம், அழகான வாழ்க்கை” – மண்முனைப்பற்றில் பயனாளிகளுக்கு வீடுகள் கையளிப்பு!

 






மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் " சொந்தமாக இருக்க ஒரு இடம் அழகான வாழ்க்கை"  NHDA வீடமைப்பு வேலைத்திட்டத்துக்காக  தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளை திறந்து கையளிக்கும்  02ம் கட்ட  நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது... 

புதுக்குடியிருப்பு தெற்கு , புதுக்குடியிருப்பு  , ஆரையம்பதி 03 தெற்கு   , செல்வாநகர் கிழக்கு , ஆரையம்பதி கிழக்கு ஆகிய கிராம உத்தியோகஸ்த்தர் பிரிவுகளில் இன்றைய தினம் பூரணப்படுத்தப்பட்ட வீடுகள் பயணாளிகளிடம் கையளிக்கப்பட்டன .

குறித்த நிகழ்வில் பிரதேச ஒருங்கினைப்புக் குழுவின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு , பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ்  , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் த.சுபாஸ்கரன் , வீடமைப்பு அதிகாரசபையின் கணக்காளர் , சமூக வலுவூட்டல்  உத்தியோகஸ்த்தர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.