வரதன்.சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல் திணைக்களம் நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான வெகுசன ஊடக அறிவை விருத்தி செய்தல் என்னும் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது ஒரு நாள் பயிற்சி பட்டறை இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது
மாணவர்கள் மத்தியில் சமூக ஊடக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் இந்த பயிற்சி பட்டறை இடம் பெற்றது.
மாவட்ட செயலகத்தின் தகவல் கல்வி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வளையங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் இன்றைய இந்த பயிற்சி நெறியில் கலந்து கொண்டனர்
இதன் போது மாணவர்கள் சமூக ஊடகங்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில் கையாளுவது பற்றியும் ஊடக ஒழுக்க நெறி உண்மைத்தன்மை பதிப்புரிமை டிஜிட்டல் ஊடக கட்டமைப்பின் ஒழுக்க நெறி என பலதரப்பட்ட விடயங்கள் மாணவர்களுக்கான விளக்கங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)





