இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விழிப்புணர்வு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

 


இலங்கையில் தடை செய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விழிப்புணர்வு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலங்கை வங்கிகள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 83 (சி) பிரிவின் கீழ் 27 நிறுவனங்கள், தொலைபேசி செயலிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களை தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களாக அறிவித்துள்ளது.

பரந்த விசாரணையின் பின்னர் 'மேக்ஸ் ஆப் மீடியா' நிறுவனம், அதன் அங்கத்துவ நிறுவனங்களான மேக்ஸ் எல்.கே' பிரைவட் லிமிடெட் மற்றும் 'மேக்ஸ் மீடியா லங்கா பிரைவட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட பிரமிட் மோசடியை நடத்திச் சென்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கூறிய சட்ட விதிகளின் கீழ் மேலும் பல நிறுவனங்கள், செயலிகள் மற்றும் அமைப்புகள் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

 

இந்த விதியின் கீழ் பின்வரும் நிறுவனங்கள், செயலிகள் மற்றும் அமைப்புகளும் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிடுகிறது.

குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் செயலிகளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு, இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

1. Tiens Lanka Health Care (Pvt) Ltd

2. Best Life Inteational (Pvt) Ltd

3. Mark-Wo Inteational (Pvt) Ltd

4. V M L Inteational (Pvt) Ltd 5. Global Lifestyle Lanka (Pvt) Ltd

Advertisement

6. Fast3Cycle Inteational (Pvt) Ltd

7. Sport Chain app and Sport Chain ZS Society Sri Lanka

8. OnmaxDT

9. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka and MTFE DSCC Group

Advertisement

10. Fastwin (Pvt) Ltd

11. Fruugo Oline App / Fruugo Oline (Pvt) Ltd

12. Ride to Three Freedom (Pvt) Ltd

13. Qnet / Questnet

14. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School

15. Ledger Block

16. Isimaga Inteational (Pvt) Ltd

17. Beecoin App and Sunbird Foundation

18. Windex Trading

19. The Enrich Life (Pvt) Ltd

20. Smart Win Entrepreneur (Pvt) Ltd

21. Net Fore Inteational (Pvt) Ltd / Netrrix

22. Pro Care (Pvt) Ltd and Shade of Procare (Pvt) Ltd

23. SGO / sgomine.com

24. I.C.A.N. Advertising (Pvt) Ltd

25. Infinity Rover (Pvt) Ltd

26. TM App

27. Max App Media Ltd and