வாழைச்சேனை கௌரவ நீதவான் நீதிமன்றத்தில், வனப் பகுதியினரால் நீண்ட காலமாக தொடரப்பட்டு வந்த வழக்கு விசாரணையில், காரமுனை மக்களின் வழக்கு தொடர்பாக எதிராளி சார்பாக சட்டத்தரணி ஹபீப் றிபான் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மிகவும் சிறப்பான வாதங்களை முன்வைத்தார். காரமுனை கிராமம் என்பது உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தத்திற்கு பிற்பாடு முஸ்லீம் மக்கள் மீள்குடியேறி வசித்து வருகின்றார்கள். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அம்மக்களுக்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றமையானது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்பும், பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் தனது நேரத்தை செலவழித்து, தொடர்ச்சியாக பல வழக்குகளில் காரமுனை மக்களுக்காக குரல் கொடுத்து வரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹபீப் றிபான் அவர்களுக்கு, காரமுனை மக்கள்சார்பாக இதயபூர்வமான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தலைவர் எம். ஏ. நாசர் (அஜ்மீர்) முகைதீன் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் அல்ஹாஜ் வி.எம் நபீர்(ஆணை சுட்ட கட்டு கமநல அமைப்பு காரமுனை)
தகவல்: M.I.M நவாஸ்
(மனித உரிமை ஆர்வலர்)





