பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆன்டிகுவா பயணம்!

 



2026ஆம் ஆண்டு பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (ஒக்டோபர் 31) இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஆன்டிகுவா மற்றும் பார்புடா நாட்டின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்தப் பயணத்தின்போது பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவதுடன், உறுப்பு நாடுகளுக்குப் பொதுவான முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.
சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும், பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.