மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் 'அத்தம' தேசிய தூய்மை தின நிகழ்ச்சி - மூன்றாவது வேலைத்திட்டம்







 






 
 
 






 
 
 
 
 






 
 
 
 



 "ஒற்றுமையாக ஒன்றிணைவோம் - தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்!"   

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும்  "அத்தம" தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் மூன்றாவது வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வானது தேற்றாத்தீவு தெற்கு கிராம சேவகர் பிரிவில்  பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இன்று (2026.10.31) இடம்பெற்றது. 

இதன் போது 122A, தேத்தாத்தீவு தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் “Cleaning the Cemetery Road & Cutting / Trimming Tree Branches on Both Sides of Road”  எனும் வேலைத்திட்டம் காலை 8.00 - 12.00 மணிவரை  இடம்பெற்றது.

'கிளீன் ஸ்ரீலங்கா ' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி" எனும் தொனிப் பொருளை முன்னிறுத்தி தன்னார்வ மக்கள் பங்கேற்பின் முலம் தனியார்  மற்றும் மக்கள் கூட்டாண்மை எண்ணக்கருவின் அடிப்படையில் 'அத்தம' தேசிய தூய்மை தின  நிகழ்ச்சி திட்டமானது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் தேசிய நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ.  பிரபாகரன்,  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கீளின் ஸ்ரீ லங்கா பிரதிநிதிகள், முப்படையினர், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இந்த தேசிய வேலைத்திட்டமானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.