அகில இலங்கை மற்றும் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்கள் கௌரவிப்பு

 









































editor

அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டியில் தைக்வொண்டோ (Taekwondo) போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவன் பிரான்சிஸ் பிரதீஸ் மற்றும் 50ஆவது கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் 1500 மீற்றர் நீச்சல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற மாணவன் கஜேந்திரா சேஸ்மிதுன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் திரு. க. பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் விளையாட்டுத் திறமையைப் பாராட்டி அவர்களுக்கு கௌரவம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. லவக்குமார், கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர், வெற்றியீட்டிய மாணவர்களின் பெற்றோர், கல்லூரியின் பிரதியதிபர், உப அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை மற்றும் மாகாண மட்டங்களில் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டியதுடன், அவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய உடற்கல்விப் பொறுப்பாசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர்களும் இந்நிகழ்வில் நன்றியுடன் நினைவுகூரப்பட்டு பாராட்டப்பட்டனர்.

இதனிடையே, சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மாணவர்கள் தமது ஆசிரியர்களுக்கு அன்பும் மரியாதையும் கலந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

“வெற்றியை நோக்கி மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் அன்பு நிறைந்த நன்றியும் வாழ்த்தும்” என்ற உணர்வுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, மாணவர்களின் விளையாட்டு சாதனைகளையும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் ஒருசேரக் கௌரவிக்கும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.