மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று தெற்கு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணானை மேற்கு பிரிவிலுள்ள முள்ளிவெட்டுவான் மக்களுக்காக, ரூ.26 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய குடிநீர் விநியோகத் திட்டம் மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான குடிநீரை மக்களுக்கு வழங்கும் நோக்கில், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முள்ளிவெட்டுவான் விடியல் நீர் பாவனையாளர் சங்கத்தின் ஊடாக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இத்திட்டம், கடந்த சனிக்கிழமை (03) பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களால் பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால மற்றும் அத்தியாவசிய தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாகவே முள்ளிவெட்டுவான் மக்களின் பாதுகாப்பான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்கள நிலையப் பொறுப்பாளர் திருமதி V. சுலக்ஷணா அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரச அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், சமூக மட்ட செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
நீண்டகாலமாக நிலவிய குடிநீர் தேவைக்கு தீர்வாக அமைந்துள்ள இந்தத் திட்டம், முள்ளிவெட்டுவான் மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)





