விஹாரமகாதேவி பூங்காவில் மூன்று மாதங்களில் ஆட்சியைப் பலவீனப்படுத்த யக்ஷ தேவர்களை வேண்டி தேரர்கள் பூஜை

 


விஹாரமகாதேவி பூங்காவில் தேரர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, (20) மாலை வஜிரபாணி, உத்பலவண்ண, பஜ்ஜுன்ன மற்றும் மகா வெசமுணி ஆகிய யக்ஷராஜ தேவர்களை வேண்டி விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. புத்த சாசனத்தையும் காவி உடையையும் பாதுகாக்கவும், தற்போதைய ஆட்சியை மூன்று மாதங்களுக்குள் பலவீனப்படுத்தி நாட்டில் அறநெறிசார் ஆட்சியை ஏற்படுத்தவும் வேண்டி இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், புத்த சாசனத்தை அழிப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் இடம்பெற வேண்டும் என்றும், இலங்கையில் புத்த சாசனம் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த யக்ஷப் படைகளை அனுப்ப வேண்டும் என்றும் தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.