மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதான அபிவிருத்திக்கு 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு!

 






அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆராய்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலை மட்ட விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக கல்வி அமைச்சினால் 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

குறித்த நிதி ஒதுக்கீட்டின் கீழ், பாடசாலை விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்வதுடன், வலைப்பந்தாட்டப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான வசதிகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதற்கும், அவர்களுக்கான சிறந்த விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்நிலையில், மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆராய்ந்துள்ளார்.