கொக்கட்டிச்சோலையில் திருமூலர் திருமந்திரம் 3000 பாடல்கள் முற்றோதல் நிறைவு

 


(வி.ரி. சகாதேவராஜா)

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய திருமந்திர அரண்மனையில், சைவத்திருமுறைகளின் பத்தாம் திருமுறையான திருமூலர் அருளிய திருமந்திரம் 3000 பாடல்கள் முற்றோதல் நிகழ்வு நேற்று முன்தினம் (26.10.2026) திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நிறைவு பெற்றது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இந்த புனித நிகழ்வு, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதன்போது திருமந்திரத்தின் ஒன்பது தந்திரங்களிலும் உள்ள 3000 பாடல்களும் ஓதுவார்களால் பக்திப் பரவசத்துடன் ஓதப்பட்டன.

திருமந்திர முற்றோதல் நிறைவையொட்டி, திருமந்திர அரண்மனையின் ஸ்தாபகர் சிவஸ்ரீ குரு மு. அமிர்தலிங்கம் அவர்களால் விசேட பூஜை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் தலைமை வண்ணக்கர் இ. மேகராசா கலந்து சிறப்பித்தார்.

ஓதுவார்கள் குழுவினரில்
வே. மகேசரெத்தினம், மு. குணரெத்தினம், மூ. சிவகுமாரன், பொ. கோபாலபிள்ளை, மா. சுந்தரலிங்கம், ஞான. பேரின்பம், இ. மேகராசா (தலைவர்), சி. கங்காதரன் (செயலாளர்), திருமதி மா. செல்வம், திருமதி லேகேஸ்வரி மற்றும் தி. நல்லரெத்தினம் ஆகியோர் பங்கேற்றனர்.

முற்றோதல் நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு திருவருள் பெற்றனர்.