மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வு - 2026






























































மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் முதியோர் வார நிகழ்வானது 01.10.2026 ஆம் திகதி  வியாழக்கிழமை பி.ப.2.30 மணிக்கு பிரதேச செயலக  வளாகத்தில் பிரதேச செயலாளர் திருமதி. தெட்ஷணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

 இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திரு.கி.இளம்குமுதன்,  ஆரையம்பதி    பிரதேச  வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி திரு.Dr.எஸ்.ரவிசந்ரா அத்தோடு மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு.க.செந்தில்குமார்,சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.க.உதயகுமார் அத்தோடு பிரதேசத்தின் முதியோர்கள், சிறுவர்கள் அத்துடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,பொதுமக்கள் என 500 ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறுவர் முதியோர்களை மகிழ்விக்கும் வகையிலான சிறுவர்களின் நடனங்கள்,பேச்சுக்கள்,சித்திரப்போட்டி, முன்பள்ளி சிறார்களின் போசாக்கு உணவுக்கண்காட்சியும் விற்பனை சந்தையும் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள்,முதியோர்களுக்கான பாடல்கள்,விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அத்தோடு நிகழ்வுகளில் பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற சிறுவர் முதியோர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், முதியோர்களுக்கான கௌரவிப்பும், அதனுடன் இணைந்த வகையிலாக சமுர்த்தி திணைக்களத்தினால் "சிப்தொர" புலமைப்பரிசில் சான்றிதழ்கள் வழங்கல், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட "திவியட்ட சவிய" திட்டத்தின் இரண்டு பயனாளிகளுக்கு 1 ம் கட்ட வேலைத்திட்டத்தினை மேற்கொள்வதற்கான  ஒப்புதல் கடிதம் ,சமுர்த்தி திணைக்களத்தினால் 11 முன்பள்ளிகளுக்கான ஒலிபெருக்கிகளும் வழங்கப்பட்டது. 

அதன் பின்னர் நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே   நிறைவு பெற்றது.