இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்! 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி

 


இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (ASF) மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது என்றும், சுமார் 200 பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் விலங்குகள் உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி மற்றும் புத்தளம் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 48 பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக திணைக்களத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் பிரதீப் குமாரவடு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த ஆய்வுகளின்போது சுமார் 1,200 பன்றிகள் பரிசோதிக்கப்பட்டன, அவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான பன்றிகளுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

 கடந்த ஆண்டு நோயின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், சில குறிப்பிட்ட இடங்களில் இந்த நோய் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

நோய் மேலும் பரவுவதைக் குறைப்பதற்காக, பரிந்துரைக்கப்பட்ட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களையும் தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு விவசாயிகளை வலியுறுத்தி, இந்நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் ஒரு விலங்குவழி நோய் அல்ல என்றும், அது பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவாது மேலும், பன்றி இறைச்சி மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தாததால் அது மனித நுகர்வுக்குப் பாதுகாப்பானது.

இதற்கிடையில், விலங்குகளின் கழிவுகளை முறையற்ற முறையில் அகற்றுவது, நோய் வேகமாகப் பரவுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.