கிழக்கு மாகாண பளுதூக்குதல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 10 பதக்கங்கள்!

 












ஆரையம்பதி பிரதேச செயலக வீரர், வீராங்கனைகள் 8 பதக்கங்களை வென்று சாதனை

2026.10.04 அன்று திருகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாண பளுதூக்குதல் போட்டியில், மட்டக்களப்பு மாவட்டம் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி மொத்தமாக 10 பதக்கங்களை வென்றுள்ளது.

இதில், ஆரையம்பதி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி 8 பதக்கங்களை தம்வசப்படுத்தியுள்ளனர்.

குறிப்பாக, புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் 7 பதக்கங்களை வென்று குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

 ஆண்கள் பிரிவு

முதலாம் இடம் – T. Yutharsan
 மூன்றாம் இடம் – T. Sharanithan

பெண்கள் பிரிவு

 முதலாம் இடம் – M. Dakshana

 இரண்டாம் இடம் பெற்றவர்கள்:
 V. Vithusha
R. Javanitha
 M. Thakshila

மூன்றாம் இடம் – M. Dilakshana

கிழக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றதன் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கும் புதுக்குடியிருப்பு சுடர் விளையாட்டுக் கழகத்திற்கும் இவ்வீரர், வீராங்கனைகள் பெருமை சேர்த்துள்ளனர்.

சாதனை படைத்த அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் BATTI MEDIA சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.