ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சவூதி அரேபிய மன்னரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும் - பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க

 


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையர் சிவராசா அனோஜனின் விடயம் தொடர்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சவூதி அரேபிய மன்னரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கையர் சிவராசா அனோஜன் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிகின்றது. எனினும், இந்த விடயத்தில் அரச மட்டத்தில் மேலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது.

எனது பார்வையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சவூதி அரேபிய மன்னரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுப்பது அவசியமாக இருக்கலாம். இது சாதாரண இராஜதந்திர நடைமுறையாகும். ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டின் தலைவரிடம் நேரடியாக வேண்டுகோள் விடுக்கும்போது, அதற்கு உரிய பதில் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே, தற்போது இந்த விடயத்தில் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகளில் ஜனாதிபதி மட்டத்திலான நேரடி வேண்டுகோளும் ஒன்றாகும். இலங்கையர் ஒருவரின் உயிர் தொடர்பான இந்த விடயத்தில் அரசாங்கம் கிடைக்கக்கூடிய அனைத்து இராஜதந்திர வழிமுறைகளையும் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவி கருணாநாய