மட்டக்களப்பின் கல்விப் பெருமையை தேசிய அளவில் மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.
இலங்கை தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டித் தொடரில், தமிழறிவு வினாவிடை – பிரிவு 02 போட்டியில் பங்கேற்ற வின்சென்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலை மாணவிகள், தமது அபார தமிழறிவு மற்றும் திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் தமது அறிவாற்றலையும் மொழித்திறனையும் சிறப்பாக வெளிப்படுத்திய மாணவிகள், மட்டக்களப்பின் பெயரை தேசிய அரங்கில் உயர்த்தியுள்ளனர்.
மாணவிகளின் இந்த வெற்றி, அவர்களின் தனிப்பட்ட திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமன்றி, அவர்களை சிறந்த முறையில் வழிநடத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பாடசாலை சமூகத்தின் கூட்டு முயற்சிக்கும் கிடைத்துள்ள வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று மட்டக்களப்புக்கும் தமது பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுவதுடன், அவர்களின் வெற்றிக்குப் பின்னால் துணைநின்ற அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கும் எமது ஊடகம் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறது
தேசிய மட்டத்தில் வெளிப்படுத்தியுள்ள இம்மாணவிகளின் சாதனை, மட்டக்களப்பின் கல்வி வரலாற்றில் மேலும் ஒரு பெருமைக்குரிய பதிவாக அமைந்துள்ளது.





