பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறிய ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்

 

 

 


 

 

 கட்சியினரால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று (03) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் மிகக் குறுகிய நேரத்திலேயே முடிவுக்கு வந்துள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், ஆரம்பிக்கப்பட்டு ஒரு மணித்தியாலம் கூட நிறைவடைவதற்குள் அவசர அவசரமாக முடிவுக்கு வந்துள்ளது.

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட களத்தில், எதிர்க்கட்சியின் பிரதான பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் எவரும் கலந்துகொள்ளாது முழுமையாகப் புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர்க்கட்சிக்குள்ளேயே முரண்பாடுகள் வெடித்துள்ளமையும், கட்சியின் அழைப்பை ஏனைய பங்காளிகள் பொருட்படுத்தவில்லை என்பதும் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மக்களைத் திரட்டிப் பெரும் போராட்டமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சொற்ப எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம், வந்திருந்த பொதுமக்களின் கவனத்தைக் கூட ஈர்க்கத் தவறி தோல்வியில் முடிந்தது.