பெருமாள் சிவகுமார், ஆனந்தி கனகரத்தினம் மற்றும் லலித் கன்னங்கர ஆகிய மூவர் புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது, ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் புதிய உயர் நீதிமன்ற நீதிபதிகளாகத் தமது பதவிப்பிரமாணங்களைச் செய்துகொண்டனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.





