மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு குடம்பிகள் இனம் காணப்பட்ட சுகாதாரப் பிரிவுகளில் அதனை அழிக்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு










வரதன் 



 சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவும் இனங்காணப்பட்ட இடங்களில் அதனை தடுக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மாவட்ட  சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரனின் பணிப்புரைக்க மைவாக அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

 இதன் ஒரு கட்டமாக தேசிய ரீதியில் மட்டக்களப்பு மாவட்டம் டெங்கு நோய் பரவும் சிவப்பு வலையமாக காணப் பட்டுள்ளதை அடுத்து தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து

 மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட சுகாதாரப்பிரிவு களில் கிணறுகளில் டெங்கு குடம்பிகளை உண்ணக்கூடிய குறா,ஹப்பீஸ் மீன் குஞ்சுகளை விடும் நிகழ்வு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி U. உதயகுமார் தலைமையில் வெட்டுக்காடு சுகாதாரப் பிரிவில் இன்று இடம்பெற்றது

 இதன் போது டெங்கு நோய் பரவுகின்ற இனம் காணப்பட்ட பகுதிகளில் கட்டம் கட்டமாக இந்த 1000 மீன் குஞ்சுகள் 300 கிணறுகளில் விடப்பட உள்ளது எதிர் வருகின்ற மழைக்கால வானிலையை முன்னிட்டு இந்த முன்னெச்சரிக்கை  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 இன்றைய இந்த நிகழ்விற்கு மட்டக்களப்பு சுற்றாடல் பொலீஸ் பிரிவு உயர் அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோஸ்தர்கள் மாவட்ட இலங்கை செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்