மட்டக்களப்பு, களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ கடற்கரை விநாயகர் ஆலயத்தின் புதிய மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 14.09.2026 திங்கட்கிழமை காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கத்தில் மங்கல விளக்கேற்றப்பட்டு, இறைவணக்கத்தைத் தொடர்ந்து பூர்வாங்க வழிபாடுகள் இடம்பெற்று சுப முகூர்த்த வேளையில் மூலஸ்தானத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இவ் விழாவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அடிக்கல் நட்டு வைத்தார்.
மேலும், ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான த.பிரபாகரன், திரு.வேல்பரமதேவ, குருமார்கள், ஆலய நிர்வாகிகள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன் போது, கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் அவர்கள் ஆலயத்தின் கட்டடப் பணிகளுக்காகத் தனது தனிப்பட்ட நிதியிலிருந்தும், நாடாளுமன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்தும் தொடர்ந்து நிதிப் பங்களிப்பு வழங்குவதாக உறுதியளித்தார்.
மேலும், இன்றைய தினம் இதன் முதற்கட்டமாகத் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு தொகையினை ஆலய தலைவரிடம் நேரடியாகக் கையளித்தார்.

.jpeg)







