செங்கலடி (ஏறாவூர் பற்று) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராஜபுரம் கிராமத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நேரில் விஜயம் செய்தார். இவ்விழாவில், கிராம மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட சவால்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
ராஜபுரம் கிராம மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்த சுத்தமான குடிநீர் விநியோகத்தை தடையின்றி முன்னெடுக்க உரிய அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேவேளை, கிராமத்தின் சாலை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சார வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
குடியிருப்பு மற்றும் சமூக வாழ்விற்கு தேவையான பிற அடிப்படை உட்கட்டமைப்புகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு, அவற்றை விரைவாக நிவர்த்தி செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டது.
இவ்வாறு, கிராம மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாகத் தாக்கம் ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நேரில் கலந்துரையாடி, தீர்வுகளை விரைவாக முன்னெடுக்க உறுதியளித்தார்.
.jpg)




