தற்போது உருவாகிவரும், எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பசிபிக் பெருங்கடலில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் உறுவாகியுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
லோவெல் (Lowell), கரினா (Karina) மற்றும் மரி (Marie) என பெயரிடப்பட்ட மூன்று சூறாவளிகளும் தற்போது பசிபிக் பகுதியில் உறுவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி நாசாவின் செயற்கைக்கோள் அவதானிப்புகளும் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டல சூறாவளிகள் பசிபிக் பகுதியில் காணப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளன.
சூறாவளி நேரடியாக நிலப்பரப்பைத் தாக்குமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.
லோவெல் சூறாவளி ஒரு கட்டத்தில் மணிக்கு 160 மைல் (சுமார் 257 கி.மீ.) வேகத்திலான காற்றுடன் Category 5 வலிமையை எட்டியதாகவும், பின்னர் அதன் வலிமையில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





