மட்டக்களப்பு, பேத்தாழை விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் வெகு விமரிசையாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.
கடந்த 05.09.2026 சனிக்கிழமை பழைய மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற நடைபவனி நிகழ்வுடன் ஆரம்பமான இவ்விளையாட்டு விழா, 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி நாள் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
இதன்போது ஆண்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 2016 O/L – 2019 A/L Batch அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதலிடத்தைப் பெற்று, இவ்வாண்டிற்கான சாம்பியன் பட்டத்தை தனதாக்கினர்.
இப்போட்டியில் 2007 O/L – 2010 A/L Batch அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றதுடன், தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் இரண்டாம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பெண்களுக்கான எல்லே சுற்றுப்போட்டியில் 2011 O/L – 2014 A/L Batch அணியினர் முதலிடத்தைப் பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 2021 O/L – 2024 A/L Batch அணியினர் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
இவ்விளையாட்டு விழாவில் பாடசாலையின் பல்வேறு பழைய மாணவர் Batch-களைச் சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
.jpeg)








