இலங்கையில் நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விலைக் குறைப்பானது இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.





