மட்டக்களப்பு மேற்கு, வலயத்தின் தளவாய் சுவாமி அஜராத்மானந்தாஜி வித்தியாலயத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் மற்றும் பரிசில்கள் வழங்கும் விழா, பாடசாலை அதிபர் திருமதி. ர. சிவராஜ் அவர்களின் தலைமையில் மங்கள விளக்கேற்றலுடன் மிக விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு ரங்கன் ஐயா வின் சார்பில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், வெட்டுப்புள்ளிக்கு மேல் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவனுக்கு பெறுமதி வாய்ந்த ‘துவிச்சக்கர வண்டி’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய அதிதிகள்:
தலைமை: திருமதி. ர. சிவராஜ் (பாடசாலை அதிபர்)
பிரதம அதிதிகள்:
திருமதி. சிவசங்கரி மட்டக்களப்பு மேற்கு)
கௌரவ. ரங்கன் ஐயா ச (ரங்கனாஸ் நகை மாளிகை உரிமையாளர் - கனடா) சார்பில் நம்மவர் கல்வி அபிவிருத்தி குழுவின் ஸ்தாபகர். j .மேவின் ஆசிரியர் கலந்து கொண்டதுடன்
சிறப்பு அதிதிகளாக
திரு. P. திவிதரன் (பிரதிக் கல்வி பணிப்பாளர் - மட்டக்களப்பு மேற்கு)
திரு. S. சத்திதாஸ் (கோட்டக் கல்வி பணிப்பாளர் - ஏறாவூர் பற்று மேற்கு)
திருமதி. உமாபதி விவேகானந்தம் (உதவிக் கல்வி பணிப்பாளர் ஆரம்ப கல்வி - மட்டக்களப்பு மேற்கு)
கௌரவ அதிதிகள்:
ஏறாவூர் பற்று மேற்கு கோட்டப் பாடசாலை அதிபர்கள்
சிறப்புரையும் கோரிக்கைகளும்:
நம்மவர் கல்வி அபிவிருத்திக் குழுவின் ஸ்தாபகரும், 'நியூ ரங்கனாஸ் தங்கச் சுரங்கம்' - 'ரங்கன் நற்பணி மன்றம் (கனடா - கிளை: வவுனியா)' சார்பில் J. மேவின் ஆசிரியரினால் விசேட உரையாற்றப்பட்டது இதில்
நிகழ்வின் போது, பாடசாலை அதிபரினால் பாடசாலையின் அபிவிருத்தி சார்ந்த சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அக்கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ரங்கன் நற்பணி மன்றத்தின் சார்பில் கலந்துகொண்ட ஆசிரியர் j.மேவின் அவர்கள், உடனடியாக திருவாளர் ரங்கன் ஐயா அவர்களுக்குத் தெரியப்படுத்தி உரிய பதிலைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.
மேலும், அப்பிரதேசத்தில் இருந்து பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குத் (Management Faculty) தெரிவுசெய்யப்பட்ட மாணவி ஒருவரின் கோரிக்கையும் கவனத்தில் கொள்ளப்பட்டு, அது தொடர்பாகவும் ரங்கன் ஐயா அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கல்வித் துறையில் மாணவர்களின் திறமைகளை ஊக்கவிக்கும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் ரங்கன் நற்பணி மன்றத்தின் ஸ்தாபகர் தங்கச் சுரங்கம் என அழைக்கப்படும் ரங்கனாஸ் நகை மாளிகை உரிமையாளர் ரங்கன் ஐயாவிற்கு விசேட கவிதை வாழ்த்துக்கள் வாசிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்
பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு பிரதேச மக்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.



.jpeg)





