அகில இலங்கை தமிழ்மொழித்தினம் – 2026: தேசிய மட்டத்தில் சாதித்த வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் கௌரவிப்பு

 





































































EDITOR


அகில இலங்கை தமிழ்மொழித்தினம் – 2026 போட்டிகளில் தேசிய மட்டத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்த வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி A.R. தினேஷ் குமார் தலைமையில், பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள் அவர்களது ஆசிரியர்களுடன் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. N. குகதாசன், தமிழ் மொழிக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சு. சகுந்தலாதேவி, பாடசாலையின் இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான உதவி அதிபர் திருமதி ஜி. ஜேனகன் அம்மணி மற்றும் தமிழ் மொழித்தின இணைப்பாளர் திருமதி யு. கேமநாதன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

தமிழறிவு வினாவிடை – பிரிவு 01 இல் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்

அகில இலங்கை தமிழ்மொழித்தினத்தின் தமிழறிவு வினாவிடை பிரிவு 01 போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

இப்பிரிவில் முகுந்தன் ஜெயவர்ஷா, ரஜீவ் காந் அஷ்வினி, துதிகரன் சுபிக்ஷா, அன்ரனிபிரதீப் அட்டாரா மற்றும் சுரேஷ் சஹரிக்ஹா ஆகிய மாணவிகள் பங்குபற்றி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

இம்மாணவிகளுக்குப் பொறுப்பாசிரியராக திருமதி நந்தினி மஞ்சரகோபன் செயற்பட்டுள்ளார்.

தமிழறிவு வினாவிடை – பிரிவு 02 இல் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்

தமிழறிவு வினாவிடை பிரிவு 02 போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் அபார சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இப்பிரிவில் நவநீதன் ஆத்மிகா, கோகுலன் ஹேனிஸ்கா, புவனேந்திரராசன் பிரணவி, சிவலோகநாதன் லதுர்ஷாயினி மற்றும் ரமேஷ் ஹபிஷ்ணா ஆகிய மாணவிகள் பங்குபற்றி தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

இம்மாணவிகளுக்குப் பொறுப்பாசிரியராக திருமதி சுனேகா கிரிஷாந் பணியாற்றியுள்ளார்.

இசைக்குழு – 02 இல் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம்

அதேவேளை, அகில இலங்கை தமிழ்மொழித்தினத்தின் இசைக்குழு – 02 போட்டியிலும் வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் தமது திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

யோகேந்திரராஜா டேமிக்கா, கலிங்கேஸ்வரன் சுபநயா, கோணேஸ்வரன் கினோஜர, முரளிதரன் பத்மஷாகரி, வாசுதேவன் கேஷானி, வாசுதேவன் தாக்ஷனா, ஜெயகரன் சாக்ஷபி, சதாநாதன் நிதுர்சிகா, திருக்குமரன் அபிஷாரிக்கா மற்றும் தியாகராஜா லக்ஷாணி ஆகிய மாணவிகள் இச்சாதனையைப் பெற்றுள்ளனர்.

இவ்விசைக்குழுவிற்குப் பொறுப்பாசிரியராக திருமதி ஜயந்தினி கலிங்கேஸ்வரன் செயற்பட்டுள்ளார்.

தமிழ்மொழி, அறிவுத்திறன் மற்றும் கலைத்திறன் ஆகிய பல்வேறு துறைகளில் தேசிய மட்டத்தில் வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை மாணவிகள் பெற்றுள்ள இவ்வெற்றிகள், அவர்களது தனிப்பட்ட திறமையை மட்டுமன்றி, அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளின் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.

தேசிய மட்டத்தில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவிகளை ஒரே நிகழ்வில் கௌரவித்தமை, வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையின் கல்விசார் மற்றும் கலைத்துறைச் சாதனைகளுக்கு மேலும் ஒரு சிறப்பான அடையாளமாக அமைந்தது.

மாணவிகளின் இந்த வெற்றிப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டதுடன், எதிர்காலத்திலும் தேசிய மட்டங்களில் மேலும் பல சாதனைகளைப் படைக்க மாணவிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.