அரசுக்கு 2 ஆண்டுகள் நாட்டுக்கு சுபம் ஜனாதிபதி அனுர நாளை பேருவளை, புலத்சிங்கள பேரணிகளில் பங்கேற்பு

 


எமது அரசுக்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டுக்கு நல்லது’ (அபே ஆர்ன்டுவ වසර දෙකයි රටට සුබයි) என்ற பொருண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் மக்கள் பேரணித் தொடரின் முதல் இரு பேரணிகள் நாளை (06ஆம் திகதி) களுத்துறை மாவட்டத்தின் பேருவளையிலும், புலத்சிங்கள பொது விளையாட்டு மைதானத்திலும் பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளன.
ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பிரதான பேரணிகள் வீதம் இந்த பேரணித் தொடரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு பேரணியும் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கமைய, வரும் 12ஆம் திகதி பொலன்னறுவையிலும், 13ஆம் திகதி அனுராதபுரத்திலும், 20ஆம் திகதி மாத்தறையிலும், 27ஆம் திகதி கம்பஹாவிலும் இந்தப் பேரணிகள் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.