மருத்துவ பரிசோதனைக்காக என்று கூறி சிங்கப்பூருக்கு கடந்த 19 ஆம் திகதி புறப்பட்டுச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, நாடு திரும்பவில்லை என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் (FCID) நேற்றைய தினம் 2026.09.24ஆஜராகுமாறு, கடந்த 16 ஆம் திகதி வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்த சந்தர்ப்பத்தில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது





