ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் 15 பேரும் தனித்தனி சிறைகளில் அடைப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்கும் புலனாய்வுத்துறை.

  


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் அண்மையில் தலா 200 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளும், வெலிகடை சிறைச்சாலையில் ஒரே இடத்தில் வைக்கப்படாமல் வெவ்வேறு தனித்தனி சிறைக் கூடங்களில் பிரிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலையால் வழங்கப்படும் உணவை உட்கொண்டு ஏனைய கைதிகளுடன் இவர்கள் இயல்பாகப் பேசி வந்தபோதிலும், இவர்களின் நடவடிக்கைகளை சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். 

இதனிடையே, நீதிமன்ற உத்தரவு மற்றும் சட்டமா அதிபரின் வழிகாட்டலுக்கு அமைவாக, இந்த 15 பேரின் சொத்துக்களையும் அரசுடமையாக்குவதற்கான சிறப்பு விசாரணைகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) ஆரம்பித்துள்ளதுடன், இச்செயல்முறை எதிர்வரும் சில மாதங்களுக்குள் நிறைவடையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.