தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்!

 


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள், தொடங்கொட மற்றும் கெலனிகம அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த 10 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.