மட்டக்களப்பு மாணவர்களின் சாதனைகள்! SLTA ‘Cool Tennis’ போட்டியில் சாதனைகளை பதிவு செய்துள்ளனர்.

 




இலங்கை டென்னிஸ் சம்மேளனம் (SLTA) 10 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்காக நடத்திய  ‘Cool Tennis’ போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெருமைமிக்க சாதனைகளை பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு SLTA மைதானத்தில் நடைபெற்​ற இப்போட்டியில், மட்டக்களப்பு மண்ணைச் சேர்ந்த இளம் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல பிரிவுகளில் வெற்றிகளைக் குவித்துள்ளனர்.

முக்கிய வெற்றி விபரங்கள்:

சேவோன் அவுட்ஸ்கோன் (Sheawon Outschoorn): மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவனான இவர், 'Green Ball Level 1' பிரிவில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். 

மு. நர்மிதா: ஈஸ்டர்ன் இன்டர்நேஷனல் பள்ளி (Eastern International School) மாணவியான இவர், 'Orange Ball Achievers' பிரிவில்  சாம்பியனாக உருவெடுத்துள்ளார். 

சான்ரினோ: 'Red Ball Achievers' பிரிவில்  முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


 இளம் வெற்றியாளர்களுக்கும், மண்முனை வடக்கு பிரதேச சபை வளாகத்தில் இயங்கி வரும் மட்டக்களப்பு டென்னிஸ் கழகத்தின் (Batticaloa Tennis Club) பயிற்சியாளர் இலட்சுமிசுந்தரம் அநிருத்தன் அவர்களுக்கும்    பாடசாலை  சமூகத்தினரும்     பெற்றோர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் 

      சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.