மட்டக்களப்பில் அடித்தள சமாதானக் கட்டியெழுப்பல் மற்றும் முரண்பாடு தடுப்பை வலுப்படுத்தும் CIRCLE Wing of Young Feminist Team (CIRCLE).



























UNOPS–VRIDDHI சமாதானக் கட்டியெழுப்பல் முயற்சியின் கீழ்
மட்டக்களப்பு, இலங்கை
CIRCLE Wing of Young Feminist Team, எரவூர்ப்பற்று, கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய பங்கேற்பு முறையிலான முரண்பாடு வரைபடச் செயல்முறையின் மூலம் அடித்தள சமாதானக் கட்டியெழுப்பல் மற்றும் முரண்பாடு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. இந்த செயல்முறை 14–31 ஜூலை 2026 காலப்பகுதியில் குழுக் கலந்துரையாடல்கள், தனிநபர் கலந்துரையாடல்கள் மற்றும் சமாதான உரையாடல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

இச்செயல்முறையில் அரசாங்க மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரதிநிதிகள், பெண்கள், இளைஞர் சமாதானத் தூதுவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பங்கேற்று, சமூகங்களை ஒன்றிணைக்கும் மற்றும் பிரிக்கும் காரணிகளை அடையாளம் கண்டனர். 

காணி மற்றும் எல்லைப் பதற்றங்கள், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானப் பயன்பாடு, பாலின அடிப்படையிலான வன்முறை (GBV) மற்றும் பாதுகாப்பு கவலைகள், இளவயது மற்றும் பலதிருமணங்கள், இடம்பெயர்வு, இளைஞர் ஈடுபாட்டின் குறைவு, வாழ்வாதார மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்கள், சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் வழியாக இடம்பெறும் பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக அடையாளம் காணப்பட்டன. 

அதேவேளை, பெண்கள், இளைஞர்கள், பாடசாலைகள், விளையாட்டு, மதத் தலைவர்கள் மற்றும் சமூக வலையமைப்புகள் சமாதானக் கட்டியெழுப்பலுக்கான முக்கிய இணைப்புகளாகவும் அடையாளம் காணப்பட்டன.
நடைமுறை சார்ந்த அடுத்த கட்ட நடவடிக்கையாக, மூன்று DS பிரிவுகளிலும் ஏற்கனவே இயங்கி வரும் Peace Action Committees-ஐ வலுப்படுத்துவதற்காக CIRCLE ஆரம்ப எச்சரிக்கை மற்றும் ஆரம்ப பதிலளிப்பு (Early Warning and Early Response – EWER) நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உருவாகும் பதற்றங்களை ஆரம்பத்திலேயே அடையாளம் காணுதல், உரையாடலை முன்னெடுத்தல், உரிய சேவைகளுக்கு பரிந்துரைத்தல் மற்றும் முரண்பாடுகள் தீவிரமடைவதைத் தடுப்பது ஆகியவை வலுப்படுத்தப்படும்.

“முரண்பாடு வரைபட ஆவணம் – கண்டறிதல்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அடுத்தகட்ட வழிமுறைகள்” மற்றும் “EWER நடைமுறை / ஒப்பந்தம்” ஆகிய இரு ஆவணங்களும் CIRCLE – Wing of Young Feminist Team-இன் Programme Manager/Director Ajanee Casinader அவர்களால் DIRC (District Inter-Religious Council), Batticaloa-வின் Coordinator திரு. Manoharan அவர்களிடம் மேலும் வலையமைப்பு, ஒருங்கிணைப்பு, நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பிற்காக வழங்கப்பட்டு முறையாகக் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வு National Peace Council (NPC) இனால் வசதிப்படுத்தப்பட்டதுடன், அடித்தள முரண்பாடு வரைபடக் கலந்துரையாடல்களிலிருந்து EWER பொறிமுறை உருவாக்கம் வரையிலான முழுச் செயல்முறையும் வள நபர் திரு. A. Sornalingam அவர்களால் வழிநடத்தப்பட்டு வசதிப்படுத்தப்பட்டது.

நிகழ்வின் முக்கிய அம்சமாக, மூன்று DS பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று Peace Action Committees-உடன் EWER ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது. அடித்தள சமாதானக் கட்டியெழுப்பலுக்கான அவர்களின் பங்களிப்பு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டப்பட்டும் கௌரவிக்கப்பட்டும் இருந்தது.

இந்நிகழ்வில் மூன்று DS பிரிவுகளையும் சேர்ந்த Women Development Officers, Child Rights Protection Officers, Grama Niladharis, மதத் தலைவர்கள், Youth Club Presidents, WRDS Presidents, Peace Action Committee உறுப்பினர்கள் மற்றும் ஏனைய சமூகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். Koralai Pattu Central-இன் WEDA தலைவர் திருமதி M.L. Nafeera மற்றும் வவுணதீவு சமூகத் தலைவி திருமதி S. Chandravaha ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்று கௌரவித்ததுடன், சமூக சமாதானக் கட்டியெழுப்பலுக்கான உரையாடல், வலையமைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தினர்.

இம்முயற்சி, மட்டக்களப்பில் பெண்கள் தலைமையிலான, இளைஞர் உள்ளடக்கமான மற்றும் சமூக அடிப்படையிலான சமாதானக் கட்டியெழுப்பல், நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான CIRCLE Wing of Young Feminist Team-இன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.