முன்மொழியப்பட்டுள்ள
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் அதற்கு எதிராக எழுந்துள்ள
எதிர்ப்புகள் குறித்து 'சண்டே டைம்ஸ்' பத்திரிகையின் பிரபல அரசியல்
கட்டுரையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அரசாங்கம் நீதித்துறையில் தலையிட முனைவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும்
குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்துள்ள அரச தரப்பு மூலாதாரம் ஒன்று,
தற்போதைய சட்டமா அதிபரோ அல்லது பிரதம நீதியரசரோ நியமிக்கப்பட்டதில்
அரசாங்கம் எவ்வித அரசியல் தலையீடுகளையும் செய்யவில்லை எனச்
சுட்டிக்காட்டியுள்ளது.





