குழந்தையை நடுவீதியில் விட்டு தப்பியோடிய தாய்! பொலிஸார் தீவிர விசாரணை

 



கண்டி - வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர் கைவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதனையடுத்து குழந்தையை மீட்ட நகரவாசிகள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
2026.08.13 காலை (13) சுமார் 07.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த தாய் ஒருவர் குழந்தையை இறக்கிவிட்டு சென்றுள்ளமை கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
தமிழ்மொழியில் பேசும் குழந்தைக்கு தான் வசிக்கும் கிராமம் மற்றும் மாகாணம் குறித்த எந்த தகவலும் தெரியாது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இருப்பினும், குழந்தையை இறக்கிவிட்ட முச்சக்கர வண்டியின் எண் தெளிவாக தெரியாததால், நகரில் உள்ள ஏனைய கண்காணிப்பு கமரா அமைப்புகளை சரிபார்த்து தகவல்களை பெற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.