இலங்கை சப்பிரகமுவப் பல்கலைக்கழகத்தின் மொழிகள் கற்கைகள் துறையின் தமிழ் மொழிப் பிரிவினர் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடத்திய நாடகப் போட்டியில் இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் ‘ அந்த ஒரு நிமிடம்’ என்ற யதார்த்த நாடகம் முதற் பரிசைத் தட்டிக் கொண்டுள்ளது.
இந்த நாடகம் நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளரான திரு கு. ரவிச்சந்திரன் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.
நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைப் பயிலும் பொதுக்கற்கை மாணவர்களுடனான கலந்துரையாடலூடாக இந்நாடகத்திற்கான பனுவலாக்கம் இடம்பெற்றிருந்தது.
முதற்பரிசுடன் சிறந்த நாடக நடிகர் ( ஆண், பெண்) ஆகியோருக்கான விருதுகளையும் இந்நாடகம் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
து. கௌரீஸ்வரன்,
16.08.2026