மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமான “ரொட்டிராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டித் தொடர்!

 

















 

 

 மட்டக்களப்பில் விளையாட்டுத் திறமையையும் விளையாட்டு உணர்வையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்த "ரொட்டிராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்" (Rotaract Grand Smash) டென்னிஸ் போட்டித் தொடர் இன்று சிறப்பாகத் தொடங்கி வைக்கப்பட்டது. "ஒரு போட்டி, ஒரு சாம்பியன்" (One tournament, One champion) எனும் கருப்பொருளில் இப்போட்டித் தொடர் நடைபெறுகிறது.

இந்நிகழ்வினை மட்டக்களப்பு ரொட்டிராக்ட் கழகம் (Rotaract Club of Batticaloa) மற்றும் லேக் வியூ டென்னிஸ் கிளப் (Batticaloa Lake View Tennis Club - BLVTC) ஆகியவை இணைந்து உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்துள்ளன.

நிகழ்வின் தொடக்கத்தில், வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், நடுவர்கள், பயிற்றுனர்கள் மற்றும் வீராங்கனைகள் கவுரவித்து வரவேற்கப்பட்டனர். இதில் லேக் வியூ டென்னிஸ் கிளப் (BLVTC) சார்பில் அதன் தலைவர் திரு. ஜனன், செயலாளர் திரு. தர்ஷன், பொருளாளர் திரு. J. மகீரதன், நிர்வாகி திருமதி P. நிரோமி, TAB துணைத் தலைவர் டாக்டர் நிமோஜன் மற்றும் TAB நிறுவனர் திரு. ஹரிபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், வீரர்களுக்குப் பயிற்சி அளித்துவரும் தலைமைப் பயிற்றுனர் திரு. லுக்ஷன், பயிற்றுனர்களான ஸ்டான்லி வரூன், பென்னியேல் மற்றும் சேஷங்கன் ஆகியோரின் வழிகாட்டலும் அர்ப்பணிப்பும் இதன்போது பாராட்டப்பட்டன.

அத்துடன் மட்டக்களப்பு ரொட்டிராக்ட் கழகத்தின் தலைவர் ரொட்டிராக்டர் ஐஸ்வர்யா ருத்ரா, செயலாளர் ரொட்டிராக்டர் விமல் விஜேந்திரன், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு இயக்குநர் ரொட்டிராக்டர் திலோஷன் ஸ்ரீதரன், நிதி இயக்குநர் ரொட்டிராக்டர் தனுஷ்காந்த் கிருஷ்ணதாஸ் மற்றும் சர்ஜன்ட்-அட்-ஆர்ம்ஸ் ரொட்டிராக்டர் நிவன்ராஜ் திலகராஜ் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற தொடக்க விழாவில், மட்டக்களப்பு ரொட்டிராக்ட் கழகத் தலைவர் ரொட்டிராக்டர் ஐஸ்வர்யா ருத்ரா மற்றும் லேக் வியூ டென்னிஸ் கிளப் தலைவர் திரு. ஜனன் ஆகியோர் வரவேற்புரையாற்றி, தொடர் குறித்த தங்கள் எண்ணங்களையும் ஊக்கமளிக்கும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதிக்கட்டமாக, லேக் வியூ டென்னிஸ் கிளப் மற்றும் ரொட்டிராக்ட் கழக உறுப்பினர்கள் இணைந்து புதிய டென்னிஸ் பந்து டப்பாக்களை (Tennis Ball Cans) திறந்து வைத்து, இப்போட்டித் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர். போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், நேர்மையான முறையிலும் சுவாரஸ்யமாகவும் விளையாடி விளையாட்டை ரசிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றுப்போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.