வரலாற்றுப் பெருமைமிக்க மட்டக்களப்பு, அமிர்தகளி அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவ மகோற்ஸவத்தை முன்னிட்டு, ஆலயத்திற்கு வருகை தரும் பக்த அடியார்களின் நலன் கருதி குடிநீர் கிணறுகளைச் சுத்திகரிக்கும் சமூக நற்பணி இம்முறையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஸ்ரீ லங்கா டெலிகொம் (SLT) நிறுவன உத்தியோகத்தர்களினால் வருடம் தோறும் உற்சவ காலத்தில் தன்னார்வத் தொண்டாகச் செய்யப்படுகின்ற இச்சேவை, இம்முறையும் ஊழியர்களின் முழுமையான பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அனைத்துக் குடிநீர் கிணறுகளிலிருந்தும் நீரிறைக்கப்பட்டு, முறையான கிருமிநாசினி மற்றும் குளோரின் இட்டுத் தூய்மைப்படுத்தப்பட்டன. சுத்திகரிப்புப் பணிகள் அனைத்தும் நிறைவுறுத்தப்பட்டு, தற்போது அக் கிணறுகள் அனைத்தும் பக்த அடியார்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டன.
ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்கு நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில், அவர்களின் அத்தியாவசிய குடிநீர் மற்றும் சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஊழியர்கள் இச் சேவையை செய்தமை குறிப்பிடத்தக்கது

.jpeg)
.jpeg)





