மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரு நிலம் என்றழைக்கப்படும் படுவான்கரைப் பகுதி மக்களின் நன்மை கருதி படுவான்கரை பகுதியை மையப்படுத்தியதாக சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை அமைத்துத் தருமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகி கலாநிதி உ.உதயகாந்த் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சருக்கு கேரிக்கை முன்வைத்து, நீதி சேவை ஆணைக்குழு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மட்டக்களப்பு நீதிமன்றம், மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கம், மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பிரதேச உள்ளூராட்சி மன்றங்கள் என்பவற்றிற்கு பிரதியிடப்பட்டுள்ள குறித்த
கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள விடயங்களாக,
கடந்த யுத்தத்திற்கு முன்னரான காலப்பகுதியில் பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் கொக்கட்டிச்சோலை பகுதியில் படுவான்கரை மக்களுக்கான நீதிச் சேவையினை முன்னிறுத்தி நீதி அமைச்சினால் கிராம கோட் ஒன்று இயங்கிவந்திருந்தமை சுட்டிக்காட்டப்பட்டிருந்ததுடன், குறித்த படுவான்கரை பெரு நிலத்தின் வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவுப்பற்று (வெல்லாவெளி) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் பொது மக்கள் தமக்கான சட்ட தேவைகளுக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்கு மிக நீண்ட தூரம் பிரயாணம் செய்து நேர விரயம் செய்து, அதிக செலவினை செய்து மட்டக்களப்பு நகரில் உள்ள நீதி மன்றத்திற்கும் களுவாஞ்சிகுடி நீதிமன்றத்திற்கும் வரவேண்டிய தேவைப்பாடு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட விடையங்கள் தொடர்பாகவும் விரிவாக விளக்கியுள்ளதுடன் குறித்த மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் ஆலய நிருவாகங்களினால் இத் தேவைப்பாடு தொடர்பாக முன்வைக்கப்பட்ட கேரிக்கை கடிதங்களும் இதனுடன் இணைத்து அமைச்சருக்கும் அமைச்சிற்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், சன நெரிசல் குறைந்த கால கட்டத்திலேயே படுவான்கரை பகுதி மக்களுக்கு நீதிச் சேவையின் தேவை காணப்படுவதை உணர்ந்த நீதியமைச்சு கொக்கட்டிச்சோலையில் நீதி துறைசார்ந்த செயற்பாடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக கிராம கோட்டினை நிறுவி சேவை வழங்கியிருந்திருக்கின்றமை இதன் போது சுட்டிக் காட்டப்பட்டுள்ளதுடன், கட்டட வசதி அப்பகுதியில் இருப்பதையும் அதனை புனரமைப்பு செய்தால் மீண்டும் அப்பகுதியில் துற்றுலா நீதி மன்றம் ஒன்றை நிறுவி அப்பகுதி மக்களின் நீதித் தேவைகளை பூர்த்தி செய்யலாம் எனும் நிலைப்பாடு தொடர்பாக குறித்த கோரிக்கையில் விரிவாக முன்வைக்கப்பட்டுள்ளது.
.jpg)




