ந.குகதர்சன்
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி கிராம அதிகாரி பிரிவில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு கிராம அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது.
இந்நிலையில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை மூலம் அமரத்துவமடைந்த சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஐந்தாவது ஆண்டை முன்னிட்டு ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களினால் வழங்கப்பட்ட நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வழங்கப்பட்டது.
குறித்த நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கிராம அதிகாரி எஸ்.குரு, மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பேரவை உறுப்பினர்களான சா.லோகநாதன், சி.தயாபரன், எஸ்.ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண பொதிகளை வழங்கி வைத்தனர்
















