மட் ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா













 

 

வரதன்

 கல்வி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்றல் செயல்பாடுகளை வினைத் திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது இதே வேளை

மட்டக்களப்பு கல்வி வலையத்துக்கு உட்பட்ட ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரிக்கான கனிஷ்ட்ட பிரிவு மாணவர்களுக்கான புதிய கற்பித்தல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கல்லூரியின் அதிபர் எஸ் முரளிதரன் தலைமையில் இன்று காலை விசேட இறைவழிபாடுகளின் பின்பு இடம் பெற்றது

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் சுவாமி சுவாமி நீலமாதவானந்தா , மட்டு வலைய கல்விப் பணிப்பாளர் எஸ். ரவி கலந்து கொண்டு அடிக்கலினை நாட்டி வைத்தனர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் M.துதிஷ்கரன் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் கல்வித் திணைக்கள உத்தியோகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.