வரதன்
நேற்று பிற்பகல் தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காற்றுடன் கூடிய மழை நீண்ட நாட்களுக்குப் பிறகு மழை வீழ்ச்சி பதிவாகியது
இதன் காரணமாக திருமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கடற்கரை ஆண்டிய மீனவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது
நேற்று பிற்பகல் தொடக்கம் கடலில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக வானிலை அவதான நிலையத்தின் அறிவுறுத்தலுக்க அமைவாக கடல் சார் தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லாத காரணத்தினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட கரையோர பகுதிகளிலும் மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வைத்துள்ளதுடன் கடற்கரையில் கடலின் நிலைமையைப் பற்றி அவதானித்த வண்ணம் உள்ளனர்
இந்த காலநிலை தளம்பல் காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்களின் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இன்று காலை தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மப்பும் மந்தாரம் கூடிய காலநிலை நிலவி வருவதை காணக் கூடியதாக உள்ளது











