( வி.ரி.சகாதேவராஜா)
சமகால விடுமுறை நாள்களை கழிப்பதற்காக பெரும்பாலான சுற்றுலாவிகள் மலையகத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நுவரேலியாவை நோக்கி பயணமாகின்றன .
எல்ல நீர்வீழ்ச்சி , ஹக்கல தாவரவியல் பூங்கா,சீதா எலிய ஆலயம் , நுவரேலியா ஏரி படகுச்சவாரி குதிரைச் சவாரி என களை கட்டுகின்றது.
அந்த இடங்களில் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்படுகின்றனர் .
இலேசான மழை, பனிப்பொழிவு, குளிர் என்பன நிலவுகிறது.
நுவரெலியா
பகுதியில் வாகனங்கள் பனி மூட்டத்துக்கு மத்தியில் நத்தை போல் நகர்ந்து
செல்வதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்
நிலவுகிறது.
நுவரெலியா சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகின்றது. விடுதிகள் வீடுகள் எல்லாம் நேர காலத்தோடு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
நுவரேலியா லங்காதீஸ்வரர் ஆலயம் , ரம்பொட ஆஞ்சநேயர் ஆலயம் போன்ற ஆலயங்களையும் தரிசித்து வருகின்றார்கள்.














