வாடிக்கையாளர்கள் தாங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தொலைபேசி இலக்கத்தை மாற்றாமல் வேறு எந்தவொரு தொலைத்தொடர்பு சேவை நெட்வொர்க்கிற்கும் மாறக்கூடிய Mobile Number Portability (MNP) வசதியை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முடிவதற்குள் அமல்படுத்த அரசாங்கமும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் (TRCSL) நடவடிக்கை எடுத்துள்ளன.
தொலைத்தொடர்பு சட்டத்தின் விதிகள் மற்றும் சேவை வழங்கி நிறுவனங்களின் உரிம நிபந்தனைகளுக்கு அமைவாக இந்த வசதியை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த வசதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தொலைபேசி இலக்கத்தை தக்கவைத்துக்கொண்டே தங்களுக்கு விருப்பமான சேவை நெட்வொர்க்கிற்கு மாற முடியும்





