தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு அரசு சேவையினை வழங்குதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு

  















 தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்டசமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களுக்கான நேர்மையான அரசு சேவையினை வழங்குதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கானது கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் தொகுதி கிரான்குளம், சமூக பராமரிப்பு நிலையம் தாழங்குடா. ஆகிய இரு இடங்களில் உதவி பிரதேச செயலாளர் திரு.கி இளம் குமுதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மண்முனைப் பற்று உதவிப் பிரதேச செயலாளர் திரு கி இளம்குமுதன், சமூக சேவை உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலம் பொதுமக்கள் தங்கள் சேவைகளை இலகுவாக அணுகும் முறை முதல் தங்களுக்கான சேவைகளில் ஏற்படும் இடர்பாடுகள் முரண்கள் அவற்றை தவிர்த்து நேர்மையான சேவையினை பெற்றுக்கொள்ளல் நேர்மையான சேவையினை வழங்குவது தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வாக அமைந்திருந்தது.