.

மட்டக்களப்பு, நாவற்குடா 49Aபடுகாட்டார் வீதியில் அமைந்துள்ள ATIT Institute தனது முதலாம் ஆண்டு நிறைவு விழாவையும், புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவத்தையும் நிறுவனத்தின் பிரதான வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதலாண்டு நிறைவு விழாவில், கதிரவன் கலைக் கழகத்தின் தலைவர், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. குலேந்திரராஜா ஆதித்தி நெசவு நிலைய பணிப்பாளர் திருமதி கீதா சுதாகரன், மது வரி அத்தியட்சகர் சமூக ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் புதிய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிறுவனத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்கள், மாவட்டச் செயலகம் (கச்சேரி), மதுவரித் திணைக்களம், புவிசார் மற்றும் நில அளவை சார்ந்த திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வெளிக்களப் பயிற்சிக்காக (OJT) இணைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த வாய்ப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும் ATIT நிறுவனம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.
தரமான தொழிற்கல்வி மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் பின்வரும் பாடநெறிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன:
ICT NVQ Level 3 (பகுதி நேரம்)
ICT NVQ Level 4 (முழுநேரம்)
Diploma in English
Diploma in Sinhala
முழுநேர மற்றும் பகுதி நேர தொழில்சார் பாடநெறிகள்
நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் நம்பிக்கை வைத்து இணைந்துள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்களிப்பு வழங்கி வரும் அனைவருக்கும் "Learn Today... Lead Tomorrow" எனும் மகுட வாசகத்துடன் இயங்கும் ATIT Institute தனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


.jpeg)


.jpeg)

.jpeg)




















.jpeg)








