மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09.08.2026) காலை அமைதியான முறையில் அமைதியான முறையில் இடம்பெறுகிறது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையங்களுக்கு மாணவர்கள் அதிகாலையிலேயே தமது பெற்றோருடன் வருகை தந்து, மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் பரீட்சைக்குத் தோற்றினர்.
பரீட்சைக்கு முன்னதாக பல மாணவர்கள் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டதுடன், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு பரீட்சை நிலையங்களை நோக்கி சென்றமை காணக்கூடியதாக இருந்தது.
சிறார்களின் எதிர்காலக் கல்விப் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பரீட்சையை முன்னிட்டு, பரீட்சை நிலையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்கள் முன்கூட்டியே மேற்கொண்டிருந்தன.
மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பரீட்சை நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்ததுடன், பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்கு உற்சாகம் அளித்து பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தமது கல்விப் பயணத்தில் அடுத்த கட்டத்தை வெற்றிகரமாக அடைய வேண்டும் என

























