மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு, கொடிச்சீலை எடுத்துவரும் பாரம்பரிய நிகழ்வு -2026.08.02





















மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தின் மகோற்சவம் நாளை (03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் பாரம்பரிய நிகழ்வு இடம்பெற்றது.

இன்று மாலை மட்டக்களப்பு கோட்டைமுனை வீரகத்திப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய கலாசாரக் கலைநிகழ்வுகளுடனும் பக்தர்கள் சூழவும் கொடிச்சீலை பவனியாகக் கொண்டுவரப்பட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தைச் சென்றடைந்தது.
 
தொடர்ந்து பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள இவ்வுற்சவத்தில்   11ஆம் திகதி தேரோட்டமும்  12ஆம் திகதி ஆடி அமாவாசை புண்ணிய தினத்தில்  தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன. இப்புனித தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனைத் தரிசிப்பதன் மூலம் பாவங்கள் நீங்கி நன்மைகள் கிட்டும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாகும்.